Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவி படுகொலை செய்யப்பட்டதில் பொறாமை காரணமாக இருக்கலாம் - கிளந்தான் போலீசார் தகவல்
தற்போதைய செய்திகள்

மாணவி படுகொலை செய்யப்பட்டதில் பொறாமை காரணமாக இருக்கலாம் - கிளந்தான் போலீசார் தகவல்

Share:

கோத்தா பாரு, மே.02-

கிளந்தானில் 61 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி Nurfisya Zulkifly-யின் கொலைக்கு, பொறாமையே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முன்னதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான அப்பெண்ணின் காதலர் என நம்பப்படும் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அப்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கிளந்தான் போலீஸ் தலைவர் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழப்பதற்கு முன் பாதிக்கப்பட்டவருக்கும், சந்தேக நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளதாக யூசோஃப் மாமாட் குறிப்பிட்டுள்ளார்.

Related News