கெமாமான், செப்டம்பர்.21-
கெர்தேவில் உள்ள இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கடற்கறைத் தொடர் வண்டித் திட்டம் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் கசிவு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த, பெட்ரோனாஸ் நிறுவனம் உடனடியாக புலோவர் எனப்படும் ஐந்து ஊதுகுழல்களைப் பொருத்துவதோடு, கூடுதலாக போர்டபல் ஃபெலேர் portable flare எனும் ஓர் எரிவாயு எரியூட்டியையும் நிறுவத் திட்டமிட்டுள்ளது. இதனால் கசிந்த வாயுவைப் பாதுகாப்பாகக் காட்டுப் பகுதிக்கு வெளியேற்ற முடியும் என கெமாமான் மாவட்டக் காவற்படையின் தலைவர் சுப்ரின்டெண்டன் முகமட் ராஸி ரொஸ்லி தெரிவித்துள்ளார். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், காற்று மாசு அளவு இயல்பாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், பாதுகாப்புக் கருதி இசிஆர்எல் திட்டத்திற்குச் செல்லும் பாதை இன்னும் மூடப்பட்டுள்ளது.








