Jan 22, 2026
Thisaigal NewsYouTube
மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம்

Share:

சுற்றுப்பயணிகள் போர்வையில் வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு சுற்றுலா விசா வழங்கி மோசடி வேலைகளை செய்து வந்ததாக நம்பப்படும் வங்காளதேசத்திற்கான மலேசியத் தூதரகத்தை சேர்ந்த ஓர் அமலாக்க அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் இந்த விசா வழங்கும் மோசடியில் மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர். எம் மின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் மேல் விபரங்கள் எதனையும் தற்போதைக்கு வெளியிட இயலாது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். இந்த விசா மோசடியில் நாட்டில் உள்ள மேலும் சில அமலாக்கத் தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

இதுவரையில் பிடிபட்டுள்ள இரண்டு பேர், வங்காளதேசத்தில் டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள குடிநுழைவுத்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள் என்று விஸ்மா புத்ரா அம்பலப்படுத்தியிருந்தது.

Related News

மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் | Thisaigal News