Oct 10, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டைக் கைவிடக் கோரி நஜீப் விண்ணப்பம்: நிராகரிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டைக் கைவிடக் கோரி நஜீப் விண்ணப்பம்: நிராகரிப்பு

கோலாலம்பூர், ஜூன்.11-

எஸ்ஆர்சி இண்டர்நெஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் 27 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டதாக தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கைவிடக் கோரி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனுவை, சட்டத்துறை அலுவலகம் நிராகரித்தது.

தனக்கு எதிரான வழக்கை அந்த முன்னாள் பிரதமர் நீதிமன்றத்தில் எதிர்கொண்டே தீர வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஷ்ரோவ் அசின் கமருல், கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி K. முனியாண்டியிடம் இன்று தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை முற்றாகக் கைவிட வேண்டும் என்று 71 வயது நஜீப், சட்டத்துறை தலைவரிடம் பிரதிநிதித்துவ மனு ஒன்றை வழங்கியிருந்தார்.

எனினும் நஜீப்பின் அந்த விண்ணப்பத்தைச் சட்டத்துறை தலைவர் நிரகாரித்து விட்டதால், இவ்வழக்கு திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும் என்று துணைப் பப்ளிக் பிராசிகியூட்டர், உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு