Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மாற்றாக முன்னாள் கைதிகள் பயன்பாடு ! - அமைச்சர் வ சிவக்குமார் தகவல்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மாற்றாக முன்னாள் கைதிகள் பயன்பாடு ! - அமைச்சர் வ சிவக்குமார் தகவல்

Share:

நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மாற்றாக முன்னாள் கைதிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஏனெனில், முன்னாள் கைதிகள், குறிப்பாக குறுகிய கால தண்டனையை அனுபவித்தவர்கள் இன்னும் வேலை செய்யத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சும் உள்துறை அமைச்சுடன் இணைந்து சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ மூலம் அதிகமான பயிற்சிகளையும் அளிக்கின்றன..

பல முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும்போதே பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் வெளியே வருபவர்களும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்,

2இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், முன்னாள் கைதிகளை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மாற்றாக அனுமதிக்கும்

முதலாளிகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நம்பிக்கைக் கூட்டணியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸென் ராயர் கேட்ட கூடுதல் கேள்விக்கு அமைச்சர் சிவக்குமார் அவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, தற்போது நாட்டில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர் எண்ணிக்கை குறித்து தேசியக் கூட்டணியின் பென்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் அஷிம் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிவக்குமார், கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வரையில் மலேசியாவில் 27 இலட்சத்து 30 ஆயிரத்து 153 பேர் இருப்பதாகத் தகவல் அளித்தார்.

குறிப்பிட்ட சில துறைகளில் உள்நாட்டுத் தொழிலாளர்களால் ஈடு செய்ய முடியாத நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருக்க வேண்டி உள்ளது. எனவே, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் வேலைகளில் ஈடுபடுவதற்கு உள்ளூர் பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை அமைச்சுகளும் அரசாங்க ஏஜென்சிகளும் முன்னெடுத்து வருகின்றன எனக் கூறிய அமைச்சர், தன்னியக்கமாக்கல், இயந்திரமயமாக்கல், இலக்கவியலாக்கல் ஆகியவற்றுக்கு மாறுவதை மனிதவள அமைச்சு ஊக்குவிக்கிறதாகத் தெரிவித்தார்.

இதனால், அதிக திறன்மிக்கத் தொழிலாளர்களுக்கானத் தேவையை உருவாக்குகிறது, இதனால் குறைந்த திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை சார்ந்திருப்பதை படிப்படியாக குறைக்க முடியும் என அவர் மேலும் சொன்னார்.

Related News