Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஊடகவியலாளரை மிரட்டிய நபருக்கு மூவாயிரம் ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஊடகவியலாளரை மிரட்டிய நபருக்கு மூவாயிரம் ரிங்கிட் அபராதம்

ஜோகூர் பாரு, ஜூன்.26-

நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளரை மிரட்டிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூவாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

50 வயது முகமட் ஃபிர்டாவுஸ் அப்துல்லா என்ற அந்த நபர் மாஜிஸ்திரேட் நபிலா நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

ஜோகூர் பாரு நீதிமன்ற வளாகத்தில் ஊடகத்துறையைச் சேர்ந்த 61 வயது புகைப்படக்காரரை அச்சுறுத்தும் வகையில் அந்த நபர் செயல்பட்டதாகக் குற்றச்ச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →