ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.02-
ஜோகூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் குடிநீர் கட்டண உயர்வு, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மக்களைப் பாதிக்காது என்று பிரதான குடிநீர் விநியோக நிறுவனமான ரன்ஹில் எஸ்ஏஜே சென்டிரியான் பெர்ஹாட் உறுதி அளித்துள்ளது.
குறிப்பாக, வீட்டுப் பயனர், வழிபாட்டுத் தலங்கள், குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் மற்றும் இ-காசே பதிவில் இருப்பவர்களை இந்தக் கட்டண உயர்வு சிரமத்தில் ஆழ்த்தாது என்று அந்த நிறுவனம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.








