விழாக்காலங்களில் இலவச டோல் கட்டணம் குறித்து அரசாங்கம் தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அறிவிப்பு செய்தது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று டோல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற விழாக்கால விடுமுறையின் போது வழங்கப்பட்ட இலவச டோல் கட்டணங்களுக்கு அரசாங்கம், இன்னும் அந்த தொகையை தங்களுக்கு வழங்கவில்லை என்று அந்நிறுவனங்கள் கூறின.
இதை வரி குறைப்பாக மாற்றாமல் சம்பந்தப்பட்ட தொகையை ரொக்கமாக வழங்குமாறு நாட்டின் 33 நெடுஞ்சாலைகளை நிர்வகித்து வரும் 18 நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இத்தகைய இழப்பீட்டு விதிமுறைகளை விவாதிக்க அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை அரசாங்கம் சந்தித்து இருப்பதாக தெரிகிறது.
நோன்புப்பெருநாள், சீனப்பெருநாள், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய விழாக்காலங்களுக்கு 2 நாள் வரையிலும், தேசிய தினத்தன்று ஒரு நாள் வரையும் டோல் கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளது.








