May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆணும், பெண்ணும் காரில் இறந்து கிடந்தது கொலை அல்ல
தற்போதைய செய்திகள்

ஆணும், பெண்ணும் காரில் இறந்து கிடந்தது கொலை அல்ல

Share:

ரொம்பின், பிப்ரவரி 28 -

பகாங், ரொம்பின், முவாட்சாம் ஷா வில் நேற்று ஓர் எண்ணெய் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஓர் ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தது திடீர் மரணமே, கொலையில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட இருவரின் உடமைகள் அனைத்தும் வாகனத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் டிபுத்தி சுப்ரின்டென்டன் னோர் அஸ்மான் யூசோப் தெரிவித்தார்.

இதுக்குறித்து, பெட்ரோல் நிலையத்தின் ரகசிய கேமராவை சோதனையிட்ட போது நேற்று காலை 6:42 மணியளவில் பாதிக்கப்பட்ட அந்நபர் காரை ஓட்டி வந்ததும் பின்பு அந்த கார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் முன் நின்றதும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக னோர் அஸ்மான் கூறினார்.

மேலும் அந்த நபர்கள் காரில் இருந்து கீழே இருக்கவில்லை என்றும் பகாங் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் குழுக்கள் அவ்விடத்திற்கு சென்று சோதனையிட்ட போது அவர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சியங்களும் இல்லை என்பது தெரியவந்ததாக அவர் இன்று அறிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக 41 வயதுடைய ஆண் மற்றும் 43 வயதுடைய பெண் ஆகியோரின் உடல் தெங்க்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக னோர் அஸ்மான் விளக்கினார்.

Related News