Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்ட நிலை: 5 மாநிலங்கள், 2 கூட்டரசுப் பிரதேசங்களில் பள்ளிகள் மூடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்ட நிலை: 5 மாநிலங்கள், 2 கூட்டரசுப் பிரதேசங்களில் பள்ளிகள் மூடல்

புகைமூட்ட நிலைமை காரணமாக ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சீடேக் அறிவித்துள்ளார்.

அதேவேளையில், பஹாங் மாநிலத்தில் ரொம்பின் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமே மூடப்படும் என்றும் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் பெர்லிஸ், பேரா, பினாங்கு, சபா, சரவாக் மற்றும் லபுவான் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் ஃபாட்லீனா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புகைமூட்ட நிலைமையை மாநில கல்வித் துறைகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், நிலைமைக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகளை மூடுவது பெற்றோரின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால், இனி பள்ளிகள் மூடப்படும் முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →