Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகளை மீறுவதற்குச் சமமாகும்
தற்போதைய செய்திகள்

முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகளை மீறுவதற்குச் சமமாகும்

Share:

கிளந்தானில் பொது இடத்தில் அரைகால் சிலுவார் அணிந்த குற்றத்திற்காக பெண் வியாபாரி ஒருவருக்கு அபராதம் விதித்தது, அரசியலமைப்பு சட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என்று உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

பல்லின சமூகத்தில் இத்தகைய சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், இவ்விகாரம் குறித்து அந்தப் பெண்ணுக்கு எதிராக வழங்கப்பட்ட சம்மனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கிளந்தான் மாநில நகராண்மைக்கழகத்திடமும், மாநில பாஸ் கட்சியிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக இன்று சைபர்ஜெயாவில் செய்தியாளார் சந்திப்பின் போது ஙா கோர் மிங் இதனை குறிப்பிட்டார்.

Related News