Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வியாபாரிகளில் சில புல்லுருவிகளும் காரணமாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

வியாபாரிகளில் சில புல்லுருவிகளும் காரணமாக உள்ளனர்

Share:

தீபாவளி திருநாளுக்க்கு இன்னும் .இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள வேளையில் அந்நிய நாட்டு வியாபாரிகளின் வரவினால் உள்ளூரை சேர்ந்த இந்திய வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சொந்த கடைகளை கொண்டுள்ள விபாயாரிகள் மட்டுமின்றி விழா கால வியாபாரிகளும் பெரிதும பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உள்ளூரை சேர்ந்த இந்திய வியாபாரிகளுக்கு சவால்விடும் அதேவேளையில் பெரும் ஊக்கத்துடனும் நெஞ்சுரத்துடனும் அந்நிய நாட்டு வியாபாரிகள் செயல்படுவதற்கு அவர்களுக்கு பெரும் ஊக்கமாக இருப்பது குறிப்பிடட இனத்தை சேர்ந்தவர்களே என்று குற்றஞ்சாட்டி விட முடியாது. சில புல்லுருவிகள் தருகின்ற ஆதரவினாலும், ஊக்கத்தினாலும் அந்நிய வியாபாரிகள் புற்றீசல்களை போல குவியத் தொடங்கியுள்ளனர் என்கிறார்
மலேசிய சிறுவர்த்தகர்களின் குரலாக விளங்கும் திருமதி கலா பாலமுரளி.

வியாபாரிகள் மத்தியில் சில புல்லுருவிகளாக செயல்படுகின்றவர்கள் கொடுக்கின்ற ஊக்கத்தினாலேயே அந்நிய வியாபாரிகள் பெரிய அளவில் நாடடில் குவிந்து, ஒட்டுமொத்த இந்திய வியாபாரிகளின் வர்த்கத்திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றனர்.

அவர்கள் முதலில் ஒடுக்கப்பட வேண்டும் என்று ஜவுளி வியாபார வர்த்தகரும், மலேசிய இந்து ஆகம அணியின் துணைத் தலைவருமான திருமதி கலா பாலமுரளி வலியுறுத்துகிறார்.

Related News