Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் வணிகர்களுக்கு 30% வாடகை குறைப்பு!
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் வணிகர்களுக்கு 30% வாடகை குறைப்பு!

Share:

நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள 21,000-க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு உதவும் வகையில், ஊராட்சி மன்றகங்ளின் வளாக வாடகை விகிதத்தை வரும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு 30 சதவீதம் குறைக்க சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேல்திறன் வலுவூட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 209.26 மில்லியன் ரிங்கிட் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டுடன் 15 முன்முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாகவே இந்த வாடகைக் குறைப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசால் 4.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த வாடகைக் குறைப்பு சலுகை, தகுதியுடைய 21,234 வணிகர்களுக்கு எந்தவொரு விண்ணப்பமும் தேவையின்றி தானாகவே வழங்கப்படும். உலகளாவிய விநியோகத் தொடர் சீர்குலைவால் வணிகச் செயல்பாட்டுச் செலவினங்களின் சுமையைக் குறைக்கவும், நுகர்வோரைப் பாதிக்கும் உணவு மற்றும் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு