Jun 30, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

Share:

கோலாலம்பூர், மார்ச்.25-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் RON97 மற்றும் மானியமற்ற RON95 பெட்ரோல் விலைகள் லிட்டருக்கு 60 சென் உயருகின்றன. அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 80 சென் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி, RON97 ஒரு லிட்டர் 5 ரிங்கிட் 15 சென்னாகவும் மானியமற்ற RON95 பெட்ரோல் 3 ரிங்கிட் 87 சென்னாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 5 ரிங்கிட் 52 சென்னாக உயர்கிறது. இருப்பினும், 'பூடி 95' (BUDI95) திட்டத்தின் கீழ் மானிய விலை பெட்ரோல் ஒரு ரிங்கிட் 99 சென்னாகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை 2 ரிங்கிட் 15 சென்னாகவும் எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கின்றன.

இந்த புதிய விலைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News