Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நெகிரி மாநி​லத்தில் பச்சைப் புத்தகத் திட்டத்திற்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

நெகிரி மாநி​லத்தில் பச்சைப் புத்தகத் திட்டத்திற்கு அனுமதி

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள எல்லா தோட்டங்களிலும் பச்சை புத்தகத் திட்டத்தைக் கட்டாயமாக்க மாநில ஆட்சிக் குழு முடிவு செய்துள்ளதாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் கூறினார்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு கண்டு வருவதால் அதை சமாளிக்கும் பொருட்டு தோட்டத் தொழிலாளர்கள் சுயமாக காய்கறிகளைப் பயிர் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் விஸ்மா நெகிரியில் மாநில ஆட்சிக் குழுவின் பிந்திய கூட்டத்தில் இத்தகவலை மாநில ஆட்சி குழு உறுப்பினர் சியூவ் செஹ் யொங் அறிவித்ததாக சாந்தகுமார் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் தானா மேரா தோட்டத்தில் கட்டப்பட்ட மலிவு விலை வீடுகள், தானா மேரா அத்தோட்டத்தில் வேலை செய்யும் தகுதி பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைப்பது குறித்தும் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்தாக ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்பதால் இத்திட்டத்தை விரைவுபடுத்தும்படி தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தாம் கேட்டுக் கொண்டதாக சாந்தகுமார் கூறினார்.

இக்கூட்டத்தில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உட்பட எல்லா அரசாங்க அமலாக்க அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Related News