Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பணி ஓய்வுப்பெறப் போகிறேனா? மறுத்தார் டத்தோ குமார் முத்துவேல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பணி ஓய்வுப்பெறப் போகிறேனா? மறுத்தார் டத்தோ குமார் முத்துவேல்

ஜோகூர்பாரு, நவ.9-


தாம் பணி ஓய்வுப்பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் தகவலை ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் வன்மையாக மறுத்துள்ளார்.

காணொளி வழி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலில் உண்மையில்லை, அடிப்படையும் இல்லை என்று டத்தோ குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் என்ற முறையில் மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை உறுதி செய்வதில் தாம் தொடர்ந்து முனைப்புக்காட்டி வருவதையும் கமிஷனர் டத்தோ குமார் விளக்கினார்.

பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர வேண்டாம் என்று பொது மக்களுக்கு டத்தோ குமார் நினைவுறுத்தினார்.

ஜோகூர் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடப்பாட்டில் இருக்கும் தமக்கு எதிராக அடிப்படையற்ற தகவல்கள் பகிரப்பட்டு வருவதை தாம் கடுமையாக கருதுவாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்டவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்ககை எடுக்கப்படும் என்பதையும் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் கமிஷனர் டத்தோ குமார் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →