May 6, 2026
Thisaigal NewsYouTube
செண்டாயானில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

செண்டாயானில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பேர் கைது

Share:

சிரம்பான், நவம்பர்.22-

கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் சிரம்பான் நுசாரி பிஸ் செண்டாயானில் உள்ள ஒரு உணவகம் அருகே ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாரின் விசாரணையில் உதவுவதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 மற்றும் 29 வயதுடைய அந்த இரண்டு நபர்களை வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார், மாஜிஸ்திரேட் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 302 மற்றும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் ஆகியவற்றின் கீழ் இரு நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி மற்றும் வெட்டுக்கத்தியை ஆயுதமாகக் கொண்ட முகமூடி அணிந்த நபர்கள் 33 வயதுடைய அந்த இந்திய ஆடவரை வெட்டியதுடன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அந்த ஆடவருக்கு ஒரு கைத்துண்டாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக இதற்கு முன்பு ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர், கொள்ளையடித்தல், வீடு புகுந்து திருடுதல், அடித்துக் காயம் விளைவித்தல் உட்பட 42 குற்றப்பதிவுகள் கொண்டுள்ளதாக போலீஸ் துறை தெரிவித்தது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்