இஸ்கண்டார் புத்ரி, அக்டோபர்.29-
ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, பெர்சியாரான் மெடினியில் BMW கார் ஒன்று, லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த காரில் பயணம் செய்த நால்வரில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயத்திற்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.26 மணியளவில் நிகழ்ந்தது. காரைச் செலுத்தியவர் இதில் உயிரிழந்தாக தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட ஆடவரின் உடலை மீட்பதற்கு பிரத்தியேகச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








