தெமர்லோ, ஜூலை.29-
பகாங் மாநிலத்தில் போதைப்பொருள் விநியோகிப்பாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூவரும் நேற்று தெமர்லோவில் உள்ள எஸ்பிஆர்எம் கிளை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தனர். வாக்குமூலம் பதிவுக்குப் பின்னர் அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னதாக நான்காவது சந்தேகப் பேர்வழியை எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.








