Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!
தற்போதைய செய்திகள்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல புதிய சாலைக் கட்டணம் அமல்!

Share:

கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலை ஓய்வு விடுதிப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களுக்கு மே 28 முதல் புதிய சாலைக் கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது. லிங்காரான் செகாப் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் இரண்டு கட்டங்களாக இதனைச் செயல்படுத்தவுள்ளது. கெந்திங் செம்பா அல்லது கோத்தோங் ஜெயா வழியாக நுழையும் போது இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முதலாம் கட்டத்தின் கீழ், கார் மற்றும் வேன் போன்ற கிளாஸ் 1 வாகனங்களுக்கு ஒரு நுழைவுக்கு 5 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படும். நடுத்தர லாரிகளுக்கு 15 ரிங்கிட்டும், கனரக லாரிகளுக்கு 25 ரிங்கிட்டும், டாக்சிகளுக்கு 3.30 ரிங்கிட்டும், மற்றும் பேருந்துகளுக்கு 5 ரிங்கிட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவசரகால வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இதில் இலவசம் அளிக்கப்படும். மேலும், அங்குள்ள பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் சொந்த வாகனங்களுக்கும் பதிவு அடிப்படையில் இந்த சலுகைகள் உண்டு. ஜூன் 28 முதல் அமலாகும் இரண்டாம் கட்டத்தில், அங்கு நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு 10% கட்டணச் சலுகை அல்லது 6 மாத கால சீசன் பாஸ் சலுகை வழங்கப்படும்.

Related News