ஷா ஆலாம், செப்டம்பர்.28-
மலேசியாவில் ஆண்டுதோறும் 50,000-க்கும் அதிகமான புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான நோயாளிகள் நோயின் நிலை 3 அல்லது 4 என்ற முற்றிய நிலையை எட்டிய பிறகே மருத்துவமனைக்கு வருவதாகச் சுகாதார அமைச்சர் ஸுல்கெப்ஃலி அஹ்மாட் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தக் காலதாமதமான நோயறிதலைத் தவிர்க்க, மக்கள் அனைவரும் தொடர்ச்சியான சுகாதாரப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சு இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, தேசிய புற்றுநோய் சங்கம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் ஒரு மில்லியன் பரிசோதனைகள் செய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.








