Sep 27, 2026
Thisaigal NewsYouTube
துபாயில் சிக்கியுள்ள கப்பல் பணியாளர்களை மீட்க புத்ராஜெயா தீவிர முயற்சி - அன்வார் தகவல்
தற்போதைய செய்திகள்

துபாயில் சிக்கியுள்ள கப்பல் பணியாளர்களை மீட்க புத்ராஜெயா தீவிர முயற்சி - அன்வார் தகவல்

Share:

துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் சிக்கியுள்ள பெர்காட் துவா கப்பலின் மீதமுள்ள பணியாளர்களை, நாட்டிற்கு திரும்பக் கொண்டு வர அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளானது, விஸ்மா புத்ரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹம்ரியா துறைமுகத்தில் ஏழு மாதங்கள் சிக்கியிருந்த நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய மலேசிய பணியாளர் கமல் இதாமுதீன் கமல் ஆரிஃபின்-ஐச் சந்தித்த பிறகு, அன்வார் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தொடர்ந்து முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார், அங்கு சிக்கித் தவித்து வரும் மலேசியர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்