Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் போதைப்பொருள் சோதனையில் போலீஸ் அதிகாரி காயம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் போதைப்பொருள் சோதனையில் போலீஸ் அதிகாரி காயம்

Share:

மலாக்கா மாநிலம் தஞ்சோங் கிளிங் பகுதியில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது ஆயுதம் ஏந்திய நபர், தாக்கியதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில், போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, 31 வயதுடைய சந்தேகநபர், திடீரென கத்தி போன்ற ஆயுதம் ஒன்றை ஏந்தி, போலீசாரை மிரட்டியதாக மலாக்கா மத்தி மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நபர் மிகவும் ஆவேசமாக நடந்துகொண்டதோடு, போலீஸ் அதிகாரிகளில் ஒருவரை தாக்கிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்ட அந்நபர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Related News