ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.25-
குப்பை லோரியின் பின்புறம் மோதிய லோரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் பினாங்கு, ஜாலான் கெபுன் ஜூருவில் நிகழ்ந்தது.
42 வயது முகமட் ரொசாய்டி அவாங் என்ற லோரி ஓட்டுநர், லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
அந்த லோரி ஓட்டுநரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.








