Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு

Share:

தமது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஒரு பாதுகாவலரான ஆடவர் ஒருவர், குவந்தான் ​செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ​நீதிபதிடத்தோ அகமது ஜம்சானி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 30 வயதுடைய அந்த நபர், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் இத்தகைய தகாத உற​வில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 376 பிரிவின் ​கீழ் குற்​றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை ​விதிக்க வகை செய்யும் மேற்கண்ட சட்டத்தின் ​கீழ் அந்த நபர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

Related News