Nov 21, 2025
Thisaigal NewsYouTube
மூதாட்டி மீது துப்பாக்கித் தோட்ட சிதறல் பாய்ந்ததா? போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

மூதாட்டி மீது துப்பாக்கித் தோட்ட சிதறல் பாய்ந்ததா? போலீஸ் விசாரணை

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.21-

தாம் வீட்டில் இருந்த போது நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் துப்பாக்கித் தோட்டா சிதறல் தம் மீது பட்டு, காயப்படுத்தி விட்டதாக 67 வயது அந்நிய நாட்டு மூதாட்டி ஒருவர் அளித்துள்ள போலீஸ் புகார் தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அதிகாலை 5.35 மணியளவில் பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் உள்ள தனது அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக மலேசியாவை இரண்டாவது இல்லமாகக் கொண்டுள்ள அந்த அந்நிய நாட்டு மூதாட்டி தெரிவித்துள்ளார் என்று டத்தோ அஸிஸி குறிப்பிட்டார்.

துப்பாக்கித் தோட்டா சிதறியதால் தனது புருவத்தில் காயம் ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாகவும் நேற்று வியாழக்கிழமை காலையில் அளித்த போலீஸ் புகாரில் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட தடயவியல் சோதனையில் வெற்றுத் தோட்டாவோ அல்லது சிதறலோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அந்த மூதாட்டியுடையது என்று நம்பப்படும் ரத்தக்கறை வீட்டில் காணப்பட்டதாக டத்தோ அஸிஸி விளக்கினார்.

Related News