கோலாலம்பூர், நவம்பர்.10-
2025 ஆம் ஆண்டு தேசிய திறன் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு நிதி ஆகிய இரண்டு சட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தாக்கல் செய்தார். முதலாவது வாசிப்புக்கு ஏதுவாக இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் ஸ்டீவன் சிம் சமர்ப்பித்தார்.
நாட்டில் திறன் மேம்பாடு முறையை வலுப்படுத்துவதற்கு இந்த சட்ட மசோதா மிக முக்கியம். குறிப்பாக, எதிர்காலத்தில் திறன் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் இந்த உத்தேச இரண்டு சட்ட மசோதாக்களும் மிக முக்கியம் என்று ஸ்டீவன் சிம் தமது உரையில் குறிப்பிட்டார்.








