Dec 4, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் யோகேஸ்வரன் இராமசாமி உயிர் இழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் யோகேஸ்வரன் இராமசாமி உயிர் இழந்தார்

Share:

கூலிம், ஆகஸ்ட்.05-

கெடா, கூலிம் சாலையிலிருந்து புக்கிட் மெர்தாஜாம் நோக்கிச் செல்லும் வழியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கூலிம் புக்கிட் பெசாரைச் சேர்ந்த 39 வயது யோகேஸ்வரன் இராமசாமி என்பவர் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.25 மணியளவில் நிகழ்ந்தது என்று கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.

மிதிவண்டியில் சென்ற யோகேஸ்வரனை ஹீனோ ரக லோரி மோதியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயங்களுக்கு ஆளான அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

யோகேஸ்வரன் உடல் சவப் பரிசோதனைக்காக் கூலிம் பொது மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.

Related News