Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

Share:

ஹான்டாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.

எம்.வி. ஹோண்டியஸ் என்ற கப்பலில் அரிதான ஹாண்டா வைரஸ் பரவியதில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த கப்பலில் இருந்த பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த வைரஸுக்கு தற்போது தடுப்பூசியோ, குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை என்றாலும், உலகளவில் மிகப் பெரிய ஆபத்தாக மாறும் அறிகுறிகள் இல்லை என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களில் 7 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஹான்டாவைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related News

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்