ஊழல் தொடர்பான சட்டங்களை செயல்படுத்தும் நிறுவனமான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 56வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. ஊழல் குற்றங்கள் தொடர்ந்து பரவுவதைத் தடுக்க ஆணையம் முழு கவனம் செலுத்துகிறது.
ஆனால் கால மாற்றம், தொழில்நுட்ப மாற்றம், மனித அறிவு மேம்பாடு ஆகியவற்றுடன் ஊழல் குற்றமும் ஒரு பல பரிநாம வளர்ச்சியை சந்தித்துள்ளது. முன்பெல்லாம் ஊழலை எளிதாகக் கண்டறிய முடியும், ஆனால் இப்போது அது சாதாரணக் கண்களுக்குத் தெரிவதில்லை.
பணமோ, பொருளோ இல்லாமல் ஊழல் குற்றங்களும் இப்போது நடைபெறுகின்றன. அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் கடினம். சில நேரங்களில் இணையப் பணத்தையும் உட்படுத்தி ஊழல் குற்றங்கள் நடந்து வருகின்றன.
ஊழல் குற்றங்கள் நவீனமடைந்து வருகின்ற நிலையில், அதனைத் தடுக்கும் சட்டங்களும் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழல் சட்டங்கள் தனிநபர்களுக்கு மட்டுமே உட்பட்டதாக இருந்தன. ஆனால், இப்போது வணிக நிறுவனங்களும் தங்களின் வணிகத்தை ஊழலற்ற சூழலில் நடத்த அவர்களுக்கும் இப்போது சிறப்பு சட்டங்களும் இருக்கின்றன.
தனிநபருக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு
சட்டம் வலுப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நெறிமுறைகள் நிறுவப்பட்டால், அடுத்தக் கட்டமாக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஊழலைக் கண்டு கேவலமாகப் பார்க்கும் நிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள். ஊழலைக் குற்றம் என்று ஒப்புக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் மன உறுதி இருக்க வேண்டும்.
கையூட்டை வெறுக்கும் மனநிலைக்கு மக்களை உருவாக்க பல திட்டங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னெடுத்து வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு Program Wira Anti-Rasuah (WAR) , உயர்க்கல்வி மாணவர்களுக்கு Angkatan Mahasiswa Anti-Rasuah (AMAR), Kursus Integriti dan Antirasuah (KIAR) ஆகியத் திட்டங்களை மாணவர் நிலையில் ஊழல் தடுப்பு ஆணையம் வகுத்துள்ளது.
மாணவர் நிலையைக் கடந்தவர்களுக்கும் ஆணையம் சில திட்டங்களை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, இளைஞர் குழுக்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சிகளை சங்கங்கள் மூலம் நடத்தப்படுகிறது.
அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் பொறுப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு விரிவான முறையில் விழிப்புணர்வு வழங்கி இருந்தபோதிலும், ஊழலைத் தடுப்பதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பொது மக்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவதும் பராமரிப்பதும் ஆகும். ஊழலுக்கு எதிரான உறுதிப்பாட்டை எவ்வாறு வெளிப்படுத்துவது?
ஊழல் இல்லாத உறுதிமொழி என்பது பொதுச் சேவைத் துறை, தனியார் துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றால் எளிதான முறையில் செயல்படுத்த முடியும்.
ஓர் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் தன்னார்வ முறையில் உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் முன்னெடுக்க வேண்டும். அதனை அந்த நிர்வாகத்தின் தலைமை வழிநடத்த வேண்டும்.
கடந்த அக்டோபர் 2023 வரையில் இவ்வாறான 2,049 அமைப்புகள் IBR எனப்படும் ஊழல் இல்லாத உறுதிமொழியை எடுத்துள்ளார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ஊழலுக்கு எதிரான உறுதிமொழிகளை வெளிப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும், ஊழல் எதிர்ப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான வரி விலக்கு சலுகைகள் ஏப்ரல் 5, 2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கூட்டுறவு அமைப்புகள் உட்பட மலேசியாவில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை சமூகத்துடன் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் அசையாத ஒத்துழைப்பைக் காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
ஊழலை ஒழிக்க உலகளாவிய நிலையின் ஒன்றினைவோம் !
டிசம்பர் 9 ஆம் நாள் அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நா;/ இந்த நாளை ஐநா-வில் அங்கம் பெறும் 190 நாடுகள் அங்கீகரித்துள்ளன.
ஊழலுக்கு எதிராக உலகளாவிய நிலையில் ஒன்றிணைவோம் என்பது இவ்வாண்டுக்கான கருபொருளாகும்.
ஒரு நாட்டின் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊழல் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு தனிநபரின் ஒருமித்த சிந்தனையும் செயல்பாடும் மிக மிக அவசியம் என்பதை இந்த கருபொருள் விளக்குகிறது.
ஊழலை எதிர்த்துப் போராடுவதில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடுவது முக்கியம். நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 (SDG2030) இல் 'ஊழல் தடுப்பு' என்பது நாட்டின் வளர்ச்சி, அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்வதில் கவனிக்கப்பட வேண்டிய அபாயங்களில் ஒன்றாகும்.
#hara2023 #iacd2023 #sprmpencegahan என சமூக ஊடகங்களில் பதிவிட்டு பகிரப்படும்போது ஊழலை எதிர்த்துப் போராடும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து, டிசம்பர் 9 ஆம் நாள் ஒன்றிணைவோம்! அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் வாழ்த்துக்கள்!









