Oct 18, 2026
Thisaigal NewsYouTube

திவால் அறிவிப்பு கோரி, அல்தானுயா குடும்பத்தினர் விண்ணப்பம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
திவால் அறிவிப்பு கோரி, அல்தானுயா குடும்பத்தினர் விண்ணப்பம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-

முன்னாள் மங்கோலிய மாடல் அழகி அல்தானுயா ஷாரிபுக்கு படுகொலையில் தொடர்புடைய நபர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிந்தா-வை திவால்தாரராக அறிவிக்கக்கோரி, அந்த முன்னாள் மாடல் அழகியின் குடும்பத்தினர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அல்தான்துயா படுகொலை தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு 92 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக அப்துல் ரசாக் பாகிந்தா Abdul - வழங்க வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப அந்த இழப்பீட்டுத்தொகையை வழங்க அந்த அரசியல் ஆய்வாளர் தவறிவிட்டார்.

எனவே அப்துல் ரசாக் பாகிந்தா-வை திவால்தாரராக அறிவிக்கக்கோரி, அல்தான்துயாவின் தந்தை டாக்டர் ஷாரிபூ செட்டேவ் மற்றும் தாயார் Altantsetseg ஆகியோர் கர்ப்பால் சிங் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக இந்த வழக்கு மனுவை சார்வு செய்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →