Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு பாதுகாப்பு காவலர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு பாதுகாப்பு காவலர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

நவம்பர்- 10

கடந்த நவம்பர் 6 ஆம் தேதி Ampang Point அருகே உள்ள ஒரு வங்கியிலிருந்து பாதுகாப்பு நிறுவனத்தால் திரட்டப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட் பணத்தை காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பாதுகாப்பு காவலர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Mohd Azam Ismail இது குறித்து தெரிவிக்கயில், விசாரணை அறிக்கை தயாரான பிறகு அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

சம்பந்தப்பட்ட 38 வயதுடைய ஆணும் 52 வயதுடைய பெண்ணும் கடந்த புதன்கிழமை சுமார் 10 மணியளவில் அம்பாங் ஜெயா மாவட்ட போலீசின் குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு முன்பாக, அம்பாங்கில் உள்ள ஒரு வர்த்தக மையத்திலிருந்து 1 மில்லியன் ரிங்கிட் பணத்தை கொண்ட பை காணாமல் போனது குறித்து போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், அதே நாளில், அந்தப் பை பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →