Oct 12, 2026
Thisaigal NewsYouTube

இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் நாளை விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் நாளை விசாரணை

புத்ராஜெயா, ஏப்ரல்.23-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் இரண்டாம் கட்ட விசாரணை, நாளை வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.

65 வயதான இஸ்மாயில் சப்ரியின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று எஸ்பிஆர்எம் ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

ஆகக் கடைசியாக இஸ்மாயில் சப்ரி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் 5 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டார்.

இஸ்மாயில் சப்ரியின் நான்கு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு வீடு உட்பட மூன்று இடங்களில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 16 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →