Jul 31, 2026
Thisaigal NewsYouTube
SURAU-வில் இரு பெண்களுக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

SURAU-வில் இரு பெண்களுக்கு கத்திக்குத்து; சந்தேக நபர் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

சிலாங்கூர்,கேலானா ஜெயா, அல்-எஹ்சானியா அஹ்மதியா சுராவ் -வில், ராம்போ கத்தியால் இரு பெண்களை குத்தி காயம் விளைவித்த சந்தேக நபரை போலீஸ் இன்று அதிகாலை மணி 1.30 அளவில் கைது செய்தது.

46 வயதுடைய அவ்வாடவர், காஜாங்கிலுள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் ஷஹ்ருல்னிஜாம் ஜாஃபர் தெரிவித்தார்.

அவரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க, பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் அனுமதிக்கோரப்படும் என்றாரவர்.

விற்பனை முகவரான 26 வயதுடைய பெண் ,தலை மற்றும் வயிற்றில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான வேளை, ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மற்றொரு பெண்ணான 52 வயது ஆசிரியைக்கு இடது கையில் காயம் ஏற்பட்ட வேளை, வெளிநோயாளியாக சிகிச்சையைப் பெற்று வீடு திரும்பினார்.

சந்தேக நபரை அவ்விருவரும் தெரிந்திருக்காத நிலையில், இதுவரையில் எழுவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை