மலேசியாவில் அதிக வயதுடையவர் என்று மலேசிய சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றவரான 113 வயதுடைய செலிமான் பண்டாங் என்பவர் இன்று காலமானார்.
சரவாக், கூச்சேங் -யை சேர்ந்த அந்த முதியவர் இன்று அதிகாலை 5 மணியளவில் சரடோக் மருத்துவமனையில் காலமானதாக அவரின் கொள்ளுப்பேரன் மைக்கேல் பண்டாங் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 1910 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி பிறந்தவராவார். சரவாவில் ஜேம்ஸ் புரூக் தலைமையிலான பிரிட்டிஷார் காலனித்துவ ஆட்சியையும், ஜப்பானியரின் ஆட்சியையும் நேரில் பார்த்த பெருமை செலிமான் பண்டாங் - கிற்கு உண்டு என்று அவரின் கொள்ளுப்பேரன் புகழ்ந்துரைத்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


