நாட்டில் நீண்ட காலம் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவரும், துன் மகாதீர் முகமதுவிற்கு மிக நெருக்கமானவருமான துன் டாயின் ஜைனுதீனின் மனைவி நாளை செவ்வாய்க்கிழமை காலையில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துன் டாயிமின் 67 வயது மனைவி தோ புவான் நய்மா அப்டில் காலிட், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM வழங்கிய நோட்டீஸின் நிபந்தனைகளை பின்பற்றத் தவறிவிட்டார் என்ற அடிப்படையில் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்குவிப்பு தொடர்பில் Pandora Papers வெளியிட்ட தகவலின் அடிப்படையில் டானியம் ஜைனுதீனின் குடும்பதினரை எஸ்பிஆர்எம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விசாரணை செய்து வருகிறது.








