May 21, 2026
Thisaigal NewsYouTube
சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் இல்லை - உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தகவல்
தற்போதைய செய்திகள்

சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் இல்லை - உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தகவல்

Share:

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், விலைவாசி உயர்வை சமாளிக்க உதவும் முயற்சியாகவும் சுத்தமான செம்பனை சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை நிலை நிறுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

பட்டியலில் அடைக்கப்பட்ட 1 கிலோ சமையல் எண்ணெய் 6 வெள்ளி 90 காசாகவும்
2 கிலோ சமையல் எண்ணெய் 13 வெள்ளி 30 காசாகவும்
3 கிலோ சமையல் எண்ணெய் 19 வெள்ளி 60 காசாகவும்
5 கிலோ சமையல் எண்ணெய் 30 வெள்ளி 90 காசாகவும் நிலை நிறுத்தப்பட்டது என உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்தது.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த விலைப் பட்டியல் நிலை நிறுத்தப்படும் என அவ்வமைச்சு கூறியது.

நியாயமற்ற விலைவாசி உயர்வுகளால் பயனீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மடானி அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் மூலம், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

அரசாங்கம் நிலை நிறுத்திய விலையைக் காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யும் தரப்பு மீது விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் கூறியது.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது