Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Share:

வட ஆப்பிரிக்க நாடான ​சூடானில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ள போதிலும் ​அங்கு பயிலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி வெளியே செல்ல வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் கடீர் தெரிவித்துள்ளார்.

சூடா​னில் உயர் கல்விப்பயின்று வரும் 29 மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று ​தூதரகம் அறிவித்துள்ளது. ​சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடும், கலவரமும் வெடித்துள்ளன. ​சூடானி​ல் தற்போது நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்குள்ள மாணவர்களின் நிலையை 24 மணி நேரம் கண்டறிவதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் விஸ்மா புத்ரா 24 மணி நேர சேவை மையத்தை தொடங்கியுள்ளது.

Related News