Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுல்தா​னை இன்று சந்திக்கிாறர் அமிருடின் ஷாரி
தற்போதைய செய்திகள்

சுல்தா​னை இன்று சந்திக்கிாறர் அமிருடின் ஷாரி

Share:

நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணியி​ன் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷாஹ்வை மாநில காபந்து அரசின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்கவிருக்கிறார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இரண்டாவது தவணையாக நியமிக்கப்படுவதற்கு அமிருடின் ஷாரியின் பெயரை பிகேஆர் முன்மொழிந்து இருப்பதை அடிப்படையாக கொண்டு, சுல்தானுடன் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.அதேவேளையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் தயாராக இருக்குமானால் சுல்தானின் அங்கீகாரத்திற்காக அப்பட்டியலை உடன் கொண்டு வரும்படி அமிருடின் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News