கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-
2025 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம்யு SPMU எனப்படும் சிஜில் பெலாஜாரான் மலேசியா உலாங்கான் எனும் எஸ்பிஎம் மறுதேர்வு அமர்வின் முடிவு நாளை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வில் நாடு தழுவிய நிலையில் 186 மையங்களில் 10 ஆயிரத்து 49 மாணவர்கள் அமர்ந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.








