கோலாலம்பூர், அக்டோபர்.04-
ரக்பி போட்டி விளையாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாணவர் ஒருவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தங்கும் வசதியைக் கொண்ட பள்ளிகளுக்கு இடையிலான ரக்பி ஏழாவது சாம்பியன் ஷிப் போட்டி விளையாட்டை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவிருந்த ரக்பி சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி, புதிய தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என்று கல்வி அமைச்சு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று ஈப்போவில் நடைபெற்ற ரக்பி போட்டியின் போது 16 வயது மாணவன் மயங்கி விழுந்து மரணமுற்றான். மாணவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் போட்டி விளையாட்டு ரத்து செய்யப்படுவதுடன் மாணவனின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கல்வி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








