Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அது சபா அரசாங்கம் செய்த ஏற்பாடாகும்
தற்போதைய செய்திகள்

அது சபா அரசாங்கம் செய்த ஏற்பாடாகும்

Share:

தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு, பல்வேறு தரப்பினரால் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் பட்டை, சபா அரசாங்கத்தினால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாகும்.
“மாண்புமிகு பிரதமரின் துணைவியார்” என்று மலாய் மொழியில் வடிவமைக்கப்பட்டு இருந்த அந்த வாகன எண் பட்டை, இதுவரையில் எந்தவொரு பிரதமரின் துணைவியாரின் வாகன எண் பட்டையில் இல்லாததாகும் என்று கூறப்படுகிறது.
எனினும் சபா, கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற சாரணியர் இயக்கத்தின் மாநாட்டை தொடக்கி வைப்பதற்காக டாக்டர் வான் அஸிஸா வருகை புரிந்த போது, அவரை கெளரவிக்கும் விதமாக பிரதமரின் துணைவியார் என்று அந்த வாகன எண் பட்டையில் பொறிக்கப்பட்டு இருப்பது சபா அரசாஙகத்தின் பிரத்தியேக ஏற்பாடாகும் என்று மலேசிய வானொலி தொலைக்கட்சி இசைப்பிரிவின் இயக்குநரும், முகநூல் பயனுருமான டத்தோ மொக்ஸானி இஸ்மாயில் விளக்கம் தந்துள்ளார்.

Related News