தங்காக், நவம்பர்.23-
ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் 59 வயதுடைய பெண் ஊழியர், இல்லாத "பரிசுப் பொட்டல" மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு 72 ஆயிரத்து 175 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார். முகநூல் மூலம் அறிமுகமான ஒரு நபர், அந்தப் பெண்மணிக்கு 195 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அடங்கிய பரிசுப் பொட்டலம் அனுப்பப்படும் என்று ஆசை வார்த்தைக் காட்டியுள்ளார். இந்தச் சலுகையில் ஆர்வம் காட்டிய அந்தப் பெண், கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் தனது சேமிப்புப் பணத்தில் இருந்து, 12 தவணைகளாக ஒரு வங்கிக் கணக்கிற்கு 72 ஆயிரத்து 175 ரிங்கிட்டைச் செலுத்தியுள்ளார். குடும்பத்தினருடன் இவ்விவகாரம் பற்றிப் பேசிய பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், நேற்று முன்தினம் காவற்படையில் புகார் அளித்துள்ளதாக தங்காக் Tangkak மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்தார். இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








