May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் ரயிலில் மோதி பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ரயிலில் மோதி பரிதாப மரணம்

Share:

கில்லாங், பிப்ரவரி 24 -

ஆடவர் ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் கிள்ளான், ஜாலான் பெலாபுஹான் உத்தாரா வில் உள்ள தொழிற்பேட்டையில் நிகழ்ந்தது.
ஆடவர் ஒருவர், ரயில் மோதி. உடல் இரண்டு பாகங்களாக சிதறிக் கிடப்பதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துறை விரைந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ச ஹூங் பூங் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் ஓர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், வயது 19 என்றும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் குற்றத்தன்மை எதுவும் இல்லை என்றும் இதனை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சவப்பரிசோதனைக்காக அந் நபரின் உடல், கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்தவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏ.சி.பி ச ஹூங் பூங் தெரிவித்தார்.

Related News