பூர்வகுடி கிராமவாசி ஒருவரை புலி தாக்கி கொன்றுள்ளதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் நேற்று புதன் கிழமை கிளந்தான், குவா மூசாங், போஸ் பாசிக் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது உயிரிழந்த நபர் 25 வயதுடைய பூசீ அமூட் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.
கிராமத்து அருகில் கம்போங் சுகி என்ற இடத்தில் வேட்டையாடுவதற்காக சும்பித்தானுடன் கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற அந்த பூர்வகுடி இளைஞர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை புலி தாக்கி கொன்ற சம்பவத்தை குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் சிக் சோன் ஃபூ உறுதிபடுத்தியுள்ளார்.







