மூன்று டன் லோரி ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயது லோரி ஓட்டுநரும் 21 வயது உதவியாளரும் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் கிழக்குகரையோர நெடுஞ்சாலையான எல்பிதி சாலையின் 48 ஆவது கிலோ மீட்டரில் பெந்தோங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து அதிகாலை 2.53 மணியளவில் தகவல் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சின்னாபின்னமான இசுசு ரக லோரியின் இடிப்பாடுகளிலிருந்து ஓட்டுநரையும், உதவியாளரையும் மீட்பதற்கு சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அதன் பொது உறவு அதிகாரி சுல்ஃபாடி சகாரியா தெரிவித்தார்.
பின்னர் அவ்விருவரும் தீயணைப்புப்படையின் இஎம்ஆர்எஸ் வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


