May 5, 2026
Thisaigal NewsYouTube
கெப்போங்கில் கணவன், மனைவி சடலமாகக் கண்டெடுப்பு: பெண் உடலில் 13 கத்திக் குத்துக் காயங்கள்
தற்போதைய செய்திகள்

கெப்போங்கில் கணவன், மனைவி சடலமாகக் கண்டெடுப்பு: பெண் உடலில் 13 கத்திக் குத்துக் காயங்கள்

Share:

கெப்போங், பிப்ரவரி.12-

கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

உயிரிழந்த 52 வயது பெண்ணின் உடலில் மொத்தம் 13 கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். இதில் 10 காயங்கள் கழுத்திலும், ஒன்று இடது கையிலும், இரண்டு காயங்கள் உடலிலும் காணப்பட்டன. 54 வயதான அவரது கணவர் கழுத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்துடன் சடலமாகக் மீட்கப்பட்டார்.

இந்தச் சோகமான சம்பவம் குறித்து செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மட் சுகார்னோ முஹமட் ஸாஹாரி கூறுகையில், "MERS 999 அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தாக குறிப்பிட்டார்.

உயிரிழந்த இருவரும் உள்ளூர்வாசிகள் ஆவர். அவர்களது பிரேதங்கள், சவப் பரிசோதனைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஹ்மாட் சுகார்னோ தெரிவித்தார்.

Related News