May 22, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால் காலமானார்
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால் காலமானார்

Share:

கோலாலம்பூர், மே 10-

நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோ முத்தாங் தகால், கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் இன்று காலை 11.46 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69.

டத்தோ முத்தாங் தகாலுக்கு டத்தின் ஹோ மே லெங் என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி மலேசிய பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று அஜர்பைஜான் நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட முத்தாங் தகால், உடல் நலம், சுகவீனப்பட்டதைத் தொடர்ந்து தமது வருகையை பாதியிலேயே முடித்துக்கெண்டு நாடு திரும்பினார்.

மே 6 ஆம் தேதி IJN- னில் சேர்க்கப்பட்ட அவர், சுயநினைவு இழந்த நிலையில் கவலைக்கிடமாக இருந்து வந்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சரவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முன்னாள் மேலவைத் தலைவர் டாக்டர் வான் ஜுனாடி துவாங்கு ஜாபர்-க்கு பதிலாக புதிய மேலவைத் தலைவராக முத்தாங் தகால் நியமிக்கப்பட்டார்.

மலேசிய வரலாற்றில் டாயாக் பூர்வக்குடி இனம் மற்றும் சரவா மாநிலத்தைச் சேர்ந்த முதலாவது மேலவைத் தலைவர் என்ற பெருமையை சரவா, GPS கட்சியைச் சேர்ந்த முத்தாங் தகால் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News