Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி மீது குற்றச்சசாட்டு
தற்போதைய செய்திகள்

ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி மீது குற்றச்சசாட்டு

Share:

கஞ்சா கலக்கப்பட்ட பிஸ்கட் ரொட்டியை தனது 10 வயது மகள் உண்ணும் அளவிற்கு கவனக்குறைவாக இருந்ததாக ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி ஒருவர் தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

முகமட் ஃபிர்டாவூஸ் ஹசீம் என்ற 39 வயதுடைய அந்த தொழிலாளி, கடந்த மே 29ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பேரா, கெரிக், கம்போங் பாகான் லாவின் என்ற கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபர், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது கூடிய பட்சம் 20ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Related News