கோலாலம்பூர், ஜனவரி.06-
இன்று செவ்வாய்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.0445/0495 ஆக உயர்ந்தது. இது நேற்றைய இறுதி வர்த்தக மதிப்பான 4.0695/0745-ஐ விட அதிகமாகும்.
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் டாலருக்கான தேவை குறைந்து ரிங்கிட் போன்ற வளர்ந்து வரும் சந்தை நாணயங்களின் மதிப்பு அதிகரித்ததுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.








